திமுகவோடு காங். கூட்டணி என்பது கடாயமல்ல: எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
சென்னை: திமுகவோடு காங்கிரஸ் கட்சி எப்போதும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறினார்.
சென்னையில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
இப்போது திமுகவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதற்காக திமுகவோடுதான் காங்கிரஸ் கட்சி எப்போதும் இருக்க வேண்டும என்பது கட்டாயமல்ல.
தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மிகச் சிறந்த ஆட்சியை நடத்தியவர் காமராஜர் மட்டுமே. காமராஜர் ஆட்சியில்தான் தமிழகம் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. எனவே அது போன்றதொரு ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம். மாநில அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசின் பங்கு என்பது நிச்சயமாக உள்ளது.
திமுக அரசின் சாதனை திட்டங்கள் அனைத்திலும் காங்கிரசும் ஒரு பங்காளி என்பதை உணர வேண்டும். இதை காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும். இதுதான் காமராஜ் ஆட்சி அமையும் லட்சியத்துக்கு வலுசேர்க்கும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications