கர்ப்பிணிகளிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 1.5 லட்சம் பணத்தை சுருட்டிய நர்ஸ்
சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் ரூ. 1.5 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார் நர்ஸ் ஒருவர்.
இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு பொறுப்பாளாராக இருந்து வருபவர் நிர்மலா. இது கட்டண வார்டாகும். இங்கு கர்ப்பிணிகளுக்கு சிசேரியானாக இருந்தால் ரூ. 2000 கட்டணம், சுகப் பிரவசமாக இருந்தால் ரூ. 600ம் வசூலிக்கிறார்கள்.
இந்தப் பணத்தை வசூலித்து கணக்கு வைக்க வேண்டியது நர்ஸ் நிர்மலாவின் பணியாகும். சமீபத்தில் இங்கு கணக்கு வழக்குகலை அதிகாரி சாருமதி ஆய்வு செய்தார். அப்போது பெருமளவில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நிர்மலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கர்ப்பிணிகளிடமிருந்து வசூலித்த பணத்தில் ரூ. 1.5 லட்சத்தை மோசடியாக சுருட்டியது தெரிய வந்தது. இதையடுத்து நிர்மலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பணத்தைத் திருப்பித் தர அவருக்கு அவகாசம் தரப்பட்டது. ஆனால் இழுத்தடித்து வந்தார் நிர்மலா. இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்த கொளத்தூரில் உள்ள நிர்மலாவின் வீட்டுக்குச் சென்றனர்.ஆனால் அவர் அங்கு இல்லை. தலைமறைவாகி விட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications