தலித் அமைப்புகள் ஓன்று கூடி அதிமுக அணி ஆதரிப்போம்-சாத்தை பாக்யராஜ்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தலித்களுக்கு எதிராக செயல்படும் திமுக அரசை எதிர்த்து தலித் அமைப்புகள் அனைத்தும் ஒன்று திரண்டு அதிமுகவை ஆதரிக்கும் என்று தமிழ்தேசம் கட்சி தலைவர் சாத்தை பாக்கியராஜ் தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் வகையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை மனத்தில் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வரிசையில் தமிழ் தேசம் கட்சியும் தற்போது தமிழகத்தில் செல்வாக்கு நிறைந்த பகுதிகளை தேர்ந்தெடுத்து தீவிர களப்பணியில் இறங்கியுள்ளது. நேற்று மாலை தென்காசியில் அக்கட்சியின் நிறுவனரும், மாநில தலைவருமான சாத்தை பாக்கியராஜ், தென்காசி பத்திரிக்கையாளர் அரங்கில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,

தமிழகத்தில் திமுக ஆட்சி பொருப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தலித் மக்கள், அதிகாரிகள் பாதிக்கப்பட்டும், பழி வாங்கப்பட்டும் வருகிறார்கள். சாதாரமானவர்களுக்கு தான் இந்த நிலை என்றால் உமா சங்கர் ஐஏஎஸ், நெல்லை அண்ணா பல்கலைகழக பதிவாளர் காளியப்பன், நாகர்கோவில் சப்-கலெக்டர் ஜனார்த்தனம், என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அதனை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். திமுக அரசை கண்டிக்கும் விதமாக சென்னையில் தலித் தலைவர்கள் எல்லாம் ஓன்று கூடி ஆலோசனை நடத்தினோம்.

அதன் அடிப்படையில் ஒரு தனி கூட்டணி, அதாவது 3வது அணியை அமைப்பது இல்லை. அதிமுக கூட்டணியில் இணைந்து இத்தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலித் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி, சாலை வசதி, சமுதாய நலக்கூடங்கள், என எவ்விதமான வசதிகளும் இன்றி ஏராளமான கிராமங்களில் எங்கள் சமூக மக்கள் வாழ்கிறார்கள். இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை அங்கு வசிக்கும் தமிழ் மக்களை அந்த நாடு முழுமையாக குடியமர்த்தவில்லை.

இதனை கண்டு ஆய்வு செய்த இந்தியாவில் இருந்து பத்திரிக்கையாளர் குழுக்களை அனுப்பி வைக்க வேண்டும். தென்மாவட்டமான நெல்லை, தூத்துக்குடியில் கடந்த காலங்களில் இருந்த ஜாதி கலவரம் கொடுமைகள் தற்போது இல்லை. ஆனால் வடமாவட்டமான சேலம், விழுப்புரத்தில் இவை அதிமாக இருக்கிறது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமை என்பதே இல்லாத நிலை உருவாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.10 குறைத்தால் விலைவாசி தானாகவே குறைந்து விடும். தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகள் நன்றாக உள்ளன. ஆனால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் இன்னும் அப்படியேதான் உள்ளது.

வெளிநாடுகளில் கூடிநீர் இன்றி கஷ்டப்பட்ட காலம் மாறி தற்போது கடல்நீரை சுத்தமான குடிநீராக மாற்றி வீட்டுக்கு வீடு நீச்சல் குளம் அமைக்கும் அளவுக்கு மாறிவி்ட்டனர். ஆனால் எல்லா வளமும் இங்கு இருந்தும் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிராமங்களில் வாழ்பவர்களுக்கு கிடைக்கவில்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+