அயோத்தி: மத மோதல்களை உருவாக்குகிறார் கருணாநிதி-பாஜக குற்றச்சாட்டு!
மதுரை: அயோத்தி வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன் நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்று வேதம் ஓதியவர், இப்போது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதவும், பேசவும் தொடங்கியுள்ளார் என்று முதல்வர் கருணாநிதி மீது பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்..
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி வகும் காலங்களில் நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
ராமஜென்ம பூமி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது, அயோத்தியில் தான் ராமன் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேலி பேசி மத உணர்வுகளைத் தூண்டி விட்டதும் இவர்கள் தான்.
ராமர் பாலம் பிரச்சனை எழுந்த போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று முதல்வர் கருணாநிதி கடுஞ்சொல் உதிர்த்தார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பு நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்று வேதம் ஓதியவர், இப்போது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதவும், பேசவும் தொடங்கியுள்ளார்.
அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் உறுதியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறை அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். இது வாழைப்பழத்தில் ஊசி இறக்கும் வேலை என்பதை எல்லோரும் நன்கறிவார்கள்.
5வது முறையாக முதல்வராக இருக்கும் கருணாநிதி, ராஜராஜ சோழனின் நினைவிடத்தை ஏன் கண்டுபிடிக்க முடிவில்லை?, ராஜராஜனின் ஆட்சிச் சிறப்புகள், நினைவுச் சின்னங்கள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தாதது ஏன்?, நடத்தக் கூடாது என்று யாராவது தடுத்தார்களா?.
தான் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யாமல் யார் யார் மீதே பழியை போடுவது ஏன்?. இனியாவது தமிழகத்தின் பழம் பெருமையைக் காக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications