ராமலிங்க ராஜுவிடம் சிபிஐ மீண்டும் இன்று விசாரணை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ரூ 14000 கோடிக்கும் அதிகமான மோசடி வழக்கில் சத்யம் நிறுவனர் ராமலிங்கராஜுவிடம் மீண்டும் விசாரணை நடத்தியது சிபிஐ.
தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ராஜுவை, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்தது சிபிஐ. பிற்பகல் 2 மணிவரை அவரிடம் பல்வேறு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக, இந்த விசாரணை குறித்து ஒரு நாள் முன்பாகவே ராஜுவுக்கு சிபிஐ சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தன் மீதான பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்ற ராஜு, ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் ஹெபடைடஸ் சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்புதான் அங்கிருந்து வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications