ஜேப்பியார் கல்லூரி வன்முறை: விடுதி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை: வன்முறையில் ஈடுபட்டு கல்லூரி, விடுதியை சூறையாடி, ஆய்வகத்துக்கு தீ வைத்த ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் கடந்த 3ம் தேதி கலவரத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் செல்போன் பேச அனுமதிக்க வேண்டும், கல்லூரி இயக்குனராக உள்ள ரெஜினா வில்சனை நீக்கிவிட்டு மீண்டும் மரிய வில்சனை இயக்குனராக நியமிக்க வேண்டும் என்றும் கோரி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரியையும், விடுதியையும் ஆய்வுக் கூடத்தையும், கம்ப்யூட்டர்களையும் மாணவர்கள் அடித்து நொறுக்கி சூறையாடி தீ வைத்தனர். விடுதியில் இருந்த படுக்கைகளுக்கும், ஆய்வகத்திற்கும் தீ வைத்தனர். மின் வயர்களையும் அறுத்து விடுதியில் மின்தடையை ஏற்படுத்தினர்.
இதையடுத்து விடுதி மூடப்பட்டு கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு கல்லூரி நிர்வாகம் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்துள்ளது.
ஜேப்பியார் கல்லூரி மேற்பார்வையாளர் அலெக்ஸ் கொடுத்த புகாரில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் 147, 148, 356, 4(1), 427 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்படி விடுதி மாணவர்கள் 1,200 பேருமே இந்த கலவரத்திற்கு காரணமாக கருதப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் 6,000 மாணவ- மாணவிகள் படித்து வரும் இந்தக் கல்லூரிகளின் விடுதியில் 1,200 பேர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மீண்டும் திறக்கப்படும்போது பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று அனைத்து விடுதி மாணவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications