லத்திகாவுக்கு பதில் புதிய டிஜிபியை தேர்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி நடராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் லத்திகா சரணை விட சீனியரானை தன்னைப் புறக்கணித்து விட்டு டிஜிபி நியமனம் நடந்துள்ளது. இதில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் தமிழக டிஜிபி அந்தஸ்தில் இருப்பவரும், தற்போது சிஆர்பிஎப் தலைவராக பதவியேற்றுள்ளவருமான விஜயக்குமார் தாக்கல் செய்த மனுவில், லத்திகா சரண் என்னை விட ஜூனியர். இந்தப் பதவிக்கு என்னையும் பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் (அப்போது மாலதி) உண்மைகள மூடி மறைத்துள்ளார்.
எனது சீனியரான நடராஜின் கோரிக்கையில் நியாயம் உள்ளது, அவரது கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், அனுபவம், திறமை அடிப்படையில்தான் லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியாரிட்டிபடிதான் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றுகூறியிருந்தது.
செப்டம்பர் 7ம் தேதி நடராஜின் மனுவும், விஜயக்குமார் தாக்கல் செய்திருந்த பதில் மனுவும் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த பெஞ்ச், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
இன்று இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில்,
உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு இந்த நியமனம் இடம் பெறவில்லை. டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் முதல் வாரத்திற்குள் புதிய டிஜிபியை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். இதற்கு வசதியாக தமிழக அரசு புதிய அதிகாரிகள் தேர்வுப் பட்டியலை தயாரித்து அதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை வரும் 26-ம் தேதிக்குள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைத்துக்கு (யுபிஎஸ்சி) தமிழக அரசு அனுப்ப வேண்டும்.
நவம்பர் 30ம் தேதிக்குள் டிஜிபி பதவிக்கான அதிகாரியை யுபிஎஸ்சி தேர்வு செய்ய வேண்டும். அதுவரை லத்திகா சரணே டிஜிபியாக தொடரலாம் என அறிவித்தது.
லத்திகா சரண் கடந்த ஜனவரி மாதம் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையையும் அவர் பெற்றார். 1976ம் ஆண்டு பாட்ச் ஐபிஎஸ் அதிகாரி லத்திகா சரண்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications