தங்கம் விலை கிடுகிடு... இன்று மட்டும் ரூ 98 உயர்ந்தது!
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 98 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. வாரம் முழுக்க ஏறுமுகத்திலிருக்கும் தங்கத்தின் விலை, திடீரென்று ஒரு நாளில் லேசாகக் குறைவதும், பின்னர் அதைவிட பலமடங்கு உயர்வதுமாக உள்ளது.
இந்நிலையிலும், சென்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டின் தங்க இறக்குமதி, முந்தைய மாதத்தைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்து 34.80 டன்னாக உயர்ந்துள்ளது. இது, இந்தியாவில் தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதைக் காட்டும் அளவுகோலாக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளில் தங்கம் வாங்குவது அதிகரிக்கும் என்பதால்தான் செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி அதிகமாக உள்ளது.
இது குறித்து தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்க நிர்வாகியொருவர் கூறுகையில், "தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.19,000-ஆக (10 கிராம்) அதிகரித்துள்ளது. இந்நிலையில், பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது'' என்றார்.
இதேநிலை நீடித்தால், அக்டோபர் மாதத்திலும் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்ற வாரத்தில், சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் விலை 1,366 டாலராக (ரூ.61,470) உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை சுமார் ரூ.21,682-ஆக உள்ளது. தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூயால் 1,825க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 96 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 19620 க்கு விற்கப்படுகிறது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications