கேரள அரசுக்கு எதிரான லாட்டரி வழக்கிலிருந்து அட்வகேட் ஜெனரல் ராமன் விலகல்
சென்னை: கேரள அரசுக்கு எதிரான லாட்டரி வழக்கில், லாட்டரி அதிபருக்கு ஆதரவாக தமிழக அட்வகேட்ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராக மாட்டார் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்தில், கேரள அரசுக்கு எதிராக லாட்டரிச் சீட்டு அதிபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் ஒவ்வொரு லாட்டரிச் சீட்டு அதிபரும் நாட்டின் மூத்த வக்கீல்களைப் பிடித்து வாதாடி வருகின்றனர். இதனால் கேரள அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இந்த வக்கீல்களுக்கு எதிராக அது கிளம்பியுள்ளது.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மூத்த வக்கீலுமான அபிஷேக் சிங்வி ஒரு லாட்டரிச்சீட்டு அதிபருக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார். இதனால் கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் கட்சிமேலிடத்தில் புகார் கூறி சிங்வியை செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்தே தூக்கி விட்டனர்.
இந்த நிலையில் தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஒரு லாட்டரிச்சீட்டு அதிபருக்கு ஆதரவாக வாதாடினார். அவருக்கு எதிராகவும் கேரளாவில் போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது.
ராமனைக் கண்டித்து கேரள மாநில வக்கீல்கள் தீர்மானம் நிறைவேற்றினர். கேரள அமைச்சரவைக் கூட்டத்திலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு கண்டனத்தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதிக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் ராமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்.
அதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
அதில்,
பாலக்காட்டில் உள்ள மேகா டிஸ்டிரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக, தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜரானது தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதத்துக்கு பதிலாக எழுதப்படும் கடிதம் இது.
நீங்கள் தெரிவித்த விவரங்களை பரிசீலித்தேன். தமிழக அட்வகேட் ஜெனரல் என்ற முறையில், தமிழகத்துக்கு எதிரான வழக்குகளில் அவர் ஆஜராக தடையிருப்பதை தாங்கள் அறிவீர்கள். ஆனால், எங்களது முன் அனுமதி தேவைப்படாத வழக்குகளில் தமிழக அட்வகேட் ஜெனரல் (பெரும்பாலான மாநிலங்களில் உள்ளபடி) வாதாடுவதில் தடையேதும் இல்லை.
குறிப்பட்ட இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் என்ற முறையில்தான் அவர் ஆஜரானாரே தவிர, தமிழக அட்வகேட் ஜெனரல் என்ற முறையில் அவர் ஆஜராகவில்லை. எனவே, அவ்வாறு செயல்பட்டதில் தடை ஏதும் இல்லை.
எனினும், கேரள அமைச்சரவையின் முடிவின் பேரில், தாங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். அதனால், மேற்கண்ட அந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ளுமாறு, பி.எஸ்.ராமனை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதனை ஏற்று, சட்டரீதியாகவும், அரசியலமைப்புரீதியாகவும் தடையில்லாத போதிலும், இந்த லாட்டரி வழக்கில் இருந்து விலகிக் கொள்ள பி.எஸ்.ராமன் ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே, இந்த முடிவு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications