மெக்காவிற்கு சென்னையில் இருந்து 460 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டது
சென்னை: ஹஜ் பயணத்தின் முதல் விமானம் 460 பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டது. ஹஜ் பயணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.யும் வழியனுப்பி வைத்தனர்.
முஸ்லிம்களின் கட்டாய கடமைகள் 5. அதில் ஒன்றான ஹஜ் பயணத்தை அரபு மாதமான துல்ஹஜ்ஜில் மேற்கொள்வது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித இடமான மக்காவிற்குச் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு தமிழகம், புதுவை, அந்தமானில் இருந்து 5022 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதற்காக 11 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதல் விமானம் 460 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர் டாக்டர் ஜாகீர் உசேன், தமிழக அரசு செயலாளர் அலாவுதீன் ஆகியோர் ஹஜ் பயணிகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது,
புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை தமிழக முதல்வர் சார்பில் வழியனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை 2700 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதின் பயனாக தற்போது 4241 பேர் ஹஜ் செல்கின்றனர். அவர்கள் பயணம் நல்லவிதமாக அமைய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications