அடுத்த டிஜிபி யார்?-யுபிஎஸ்சிக்கு 26ம் தேதி பரிந்துரைப் பட்டியல் அனுப்புகிறது அரசு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்வது தொடர்பான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அக்டோபர் 26ம் தேதிக்குள் டிஜிபிக்களின் பெயர் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கவுள்ளது.
லத்திகா சரணை டிஜிபியாக நியமித்ததில் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அப்பட்டமான விதி மீறல் நடந்துள்ளது. எனவே டிஜிபியாக லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை லத்திகா சரண் நீடிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதி்மன்றம் போனது தமிழக அரசு. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் இதை அவசர வழக்காக கருதி விசாரிக்கவும் அது மறுத்து விட்டது.
இதையடுத்து தற்போது புதிய டிஜிபி தேர்வுக்கான பணிகளை தொடங்கியுள்ளது தமிழக அரசு. முதல் கட்டமாக பரிந்துரைப் பட்டியலை அது யுபிஎஸ்சிக்கு அனுப்பவுள்ளது.
தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில், ஆர்.நட்ராஜ், விஜயக்குமார், லத்திகா சரண், போலோநாத், திலகவதி ஆகியோர் உள்ளனர். இவர்களில் நட்ராஜ்தான் சீனியர் ஆவார். அடுத்த இடத்தில் விஜயக்குமார் வருகிறார். இவர் தற்போது சிஆர்பிஎப் தலைவராக செயலாற்றி வருகிறார். 3வது இடத்தில் இருப்பவர் லத்திகா சரண். அடுத்த இடத்தில் இருப்பவர் போலோநாத். கடைசி இடத்தில் இருப்பவர் திலகவதி.
இந்த ஐந்து பேரையும் பரிந்துரைப் பட்டியலில் குறிப்பிட்டு யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கவுள்ளது தமிழக அரசு. வருகிற 26ம் தேதிக்குள் இந்தப் பட்டியல் அனுப்பப்பட்டு விடும் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications