புதுச்சேரி ரயிலைக் கவிழ்க்க சதி-தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கட்டை கண்டுபிடிப்பு
செங்கல்பட்டு: சென்னையிலிருந்து புதுச்சேரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே ரயில் வந்தபோது தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கட்டை வைக்கப்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயில் தப்பியது.
சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று இரவு புறப்பட்ட ரயில் மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு அடுத்த ஒட்டியம்பாக்கம்-படாளம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்லீப்பர் கட்டை மீது, ரயில் மோதியது.
இதனால் ரயிலை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில் நிற்கும் இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இன்று காலை கல் வைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது ஸ்லீப்பர் கட்டை என தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications