முன்னாள் எம்.ஏல்.ஏ. தம்பி கொலை வழக்கு-மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
விளாத்திகுளம்: விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தில் முன்னாள் எம்எல்ஏ தம்பியை அடித்து கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமரகுருபர ராமநாதன். இவரது தம்பி ராஜராஜன் (42). நிலக்கிழாரான இவர் அப் பகுதியில் திமுக கிளை செயலாளராக இருந்தார்.
இவரது வீட்டில் அதே ஊரை சேர்ந்த கமால் என்பவரது மகன் ஷாஜஹான்(24) என்பவர் சிறு வயது முதலே ராஜராஜன் மனைவியான கிருஷ்ணகுமாரியிடம் டியூசன் கற்று வந்ததோடு, டிராக்டர் டிரைவராகவும் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில் ஷாஜஹான் கடந்த 21.9.09 அன்று இரவு ராஜராஜனை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள தரிசு நிலத்திற்கு சென்றதும் அவரை சரமாரியாக கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
மேலும் ரத்தகறை படிந்த அவரது சட்டையை கிருஷ்ணகுமாரியிடம் கொடுத்து துவைத்து தர சொல்லியுள்ளார். அவரும் அதனை துவைத்து கொடுத்துள்ளார்.
இது குறித்து விளாத்திகுளம் போலீசார் கொலைக்கு காரணமான இருவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
குற்றவாளிகள் ஷாஜஹான் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் அபராதமும் விதித்தார், மேலும் தடயத்தை மறைக்க முயன்றதற்காக ஷாஜஹானுக்கு மேலும் ஆயிரம் அபராதமும் விதித்து நிதிபதி மேரி அன்சலம் தீர்ப்பு வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications