திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்: 11-ம் தேதி சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு கந்தசஷ்டி திருவிழா கடந்த சனிக்கிழமை அன்று துவங்கியது. இது தொடர்ந்து 6 நாட்களுக்கு நடக்கிறது.
திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது.
பின்பு 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாக சாலை பூஜை நடந்தது. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்தது. யாக சாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கும் உச்சிகால பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி - தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் வந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி - தெய்வானையுடன், திருவாடுதுறை ஆதின கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
இரவில் வள்ளி, தெய்வானை அம்பாளுடன், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளினார். கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த வருடம் கந்தசஷ்டி திருவிழா தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வந்து வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications