ராஜபக்சே மைத்துனர் பாபநாசம் கோயிலில் விசேஷ பூஜை: பலத்த பாதுகாப்பு
வி.கே.புரம்: ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன், நேற்று பாபநாசத்தில் உள்ள சிவன் கோவில், முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
ராஜபக்சேவின் தங்கை நிருபமா எம்பியாக உள்ளார். இவரது கணவர் திருக்குமரன் நடேசன். இவர் நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அகஸ்தியர் அருவியில் குளித்து விட்டு சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அகஸ்தியர் அருவிக் கரையோரம் உள்ள முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கந்த சஷ்டி விழாவுக்காக திருச்செந்தூர் வந்துள்ளேன். அங்கு வரும்போதெல்லாம் பாபநாசம் கோயிலில் வழிபடுவது வழக்கம். தற்போது 26 வருடமாக இங்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் தெரியாது. எனது மனைவி தான் அரசியலில் உள்ளார் என்றார்.
திருக்குமரன் நடேசனுடன் இலங்கை அமைச்சர் ஆறுமுகதொண்டைமானின் உதவியாளர் மணிமுத்து, முன்னாள் எம்.பி. மகேஸ்வரனின் தம்பி விக்னேஸ்வரன் உள்பட 25 பேர் வந்திருந்தனர்.
அம்பை டி.எஸ்.பி. முத்துராமலிங்கம் தலைமையில் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications