ஜெ. ஆதரவு தருவதாக கூறியது குறித்து எனக்குத் தெரியவில்லை-மன்மோகன் சிங்

தென் கொரியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நேற்று அங்கிருந்து தாயகம் திரும்பினார். வரும் வழியில் விமானத்தில் வைத்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
தற்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. எனவே இதுகுறித்து கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என்றார். ராஜா நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் இதே போலவே பதிலளித்தார் பிரதமர்.
ராஜாவை நீக்கினால், திமுக ஆதரவைத் திரும்பப் பெற்றால் நான் 18 எம்.பிக்களைத் திரட்டித் தருகிறேன் என்று ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து கேட்டபோது, இதை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். உங்கள் மூலமாகவே எனக்கு இது செய்தியாக வந்துள்ளது. இதுகுறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம்தான் கவலைப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா என்ன பேசினார் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
நாங்கள் தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அந்தக் கூட்டணி இப்போதைக்குத் தொடர்கிறது என்றார் பிரதமர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications