வீரபாண்டி ஆறுமுகத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி 18ல் சேலத்தில் ஆர்ப்பாட்டம்: ஜெ
சென்னை: விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி வரும் 18ம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் குப்புராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் சொத்து தகராறு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவரும், பனமரத்துப்பட்டி திமுக ஒன்றியச் செயலாளரும், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள சுரேஷ்குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசிய கொடியுடன் கூடிய அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைச் சாலைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
ஓர் அமைச்சர், குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தைக் கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதோடு மட்டுமல்லாமல், உண்மைக் குற்றவாளியை வழக்கிலிருந்து விடுவிக்க துணை போவது போலவும் அமைந்துள்ளது என தெரிவித்து நான் கண்டன அறிக்கை வெளியிட்டேன்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டவுடன், குற்றவாளியை சந்தித்து ஆறுதல் கூறியதற்கான விளக்கத்தை அளிக்காமல், “நான் அரசு காரில் செல்லவில்லை, சொந்த காரில் தான் சென்றேன்" என்ற விளக்கத்தை ஒரு பத்திரிகைக்கு அளித்து இருக்கிறார் வீரபாண்டி ஆறுமுகம். அமைச்சரின் இந்தக் கூற்றும் பொய் என என்னால் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக குற்றவாளியை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காத முதல்வர் கருணாநிதியைக் கண்டித்தும், வீரபாண்டி ஆறுமுகத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் 18ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications