பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு பெண்களை நியமிக்கும் திட்டம் இல்லை என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு கூறியிருந்தார். இந்த வேலைக்கு அவர்கள் பொருத்தமற்றவர்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.அமிர்தம், பொதுச் செயலாளர் உ. வாசுகி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,
போக்குவரத்துக் கழகங்களில் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்களாக எடுக்கும் திட்டம் இல்லை என்று சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
பணியில் சேர்ந்த உடன் மாற்று பணி கோருகின்றனர், 3 மாத காலம் பிரசவ கால விடுமுறை கேட்கின்றனர், இவ்வாறு விடுமுறை வழங்குவது சாத்தியமில்லை, இந்த பணி இயல்புக்கு இது சரிப்பட்டு வராது என அமைச்சர் கே.என். நேரு கருத்து தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
போக்குவரத்துத்துறை பணி என்றால், பெண்கள் கர்ப்பப்பையை கழற்றி வைத்து விட்டு வரவேண்டும் என்று அமைச்சர் எதிர்பார்க்கிறாரா ?
மூன்று மாத பிரசவ கால விடுப்பு என்பது, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற உரிமை. அது பெண் உழைப்பாளிகளுக்குக் கிடைத்துள்ள சட்ட ரீதியான அங்கீகாரமாகும்.
இது போன்ற உரிமைகளை நிலை நாட்டுவதில், அரசு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர, தொழிற்சங்க உரிமைகளைக் கோடாரி கொண்டு வெட்டக் கூடாது.
மாற்றுப்பணி கோருபவர்களுக்கு, இயல்பாக சில பிரச்சனைகள் இருக்கலாம். அதற்கான தீர்வு காணலாம். அதை செய்வதை விட்டு விட்டு, அவர்களைப் பணிக்கே அமர்த்த மாட்டேன் என்பது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
அமைச்சர் கே.என். நேரு தனது வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும். மேலும், இதில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications