சாமி எழுதிய கடிதங்களுக்கு பதில் போனதாக-பிரதமர் அலுவலகம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இதனால் பிரதமர் அலுவலகத்திற்கு மேலும் நெருக்கடி அதிகமாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜா மீது வழக்கு தொடர அனுமதி தருவது தொடர்பாக 15 மாத காலம் பிரதமர் அமைதி காத்தது ஏன் என்று கடுமையான கேள்வியை விடுத்திருந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் அது பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, சாமி அனுப்பி கடிதங்களுக்கு உரிய முறையில் பதில்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட சாமி, நான் பிரதமருக்கு 5 கடிதங்கள் எழுதினேன். ஆனால் ஒன்றுக்கு மட்டுமே பதில் வந்தது. அதேபோல ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றுக்கு மட்டுமே பதில் வந்தது. அதேசமயம், நான் எழுதிய எந்தக் கடிதத்திற்கும் பிரதமரிடமிருந்து உரிய பதில்கள் வரவே இல்லை. உண்மையை மறைக்க பிரதமர் அலுவலகம் முயலுகிறது என்றார்.
இதையடுத்து பேசிய கோபால் சுப்ரமணியம், இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது மிகவும் சீரியஸான விவகாரம். உண்மை என்ன என்பது தெரிய வேண்டும். 2ஜி விவகாரம் தொடர்பாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள். அதை சொலிசிட்டர் ஜெனரல், ராஜாவின் வக்கீல், சிபிஐ வக்கீல் ஆகியோர் முதலில் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சாமிக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்த அனைத்து ஆவணங்களையும் ஒரு அபிடவிட்டாக வருகிற சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுகுறித்த விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.
விசாரணைக்குப் பின்னர் வெளியில் வந்த சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு உண்மையை மறைக்க முயலுகிறது என்பது கோர்ட்டில் இன்று கிட்டத்தட்ட வெளிச்சத்திற்கு வந்தது. நான் எழுதிய கடிதங்களுக்கு பிரதமர் முறையாக பதில் தரவில்லை. இதுகுறித்து கோர்ட்டும்கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து சனிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறும், ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறும் அது உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என்பதால் நாளை மாலைக்குள் பிரதமர் அலுவலகம் தனது பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்போது கோர்ட்டுக்கு தவறான தகவலை பிரதமர் அலுவலகம் கொடுத்ததா அல்லது பிரதமர் உண்மையை மறைக்க முயலுகிறாரா என்பது வெளிச்சமாகி விடும்.
எனது கடிதத்திற்குப் பிரதமர் வெறுமனே வரப் பெற்றது என்பதை மட்டுமே பதிலாக அனுப்பியுள்ளார். எனது அடிப்படைக் கேள்வி என்னவென்றால், ராஜா மீது வழக்கு தொடர ஏன் அவர் அனுமதிக்கவில்லை என்பதே என்றார் சாமி.
காங். காரியக் கமிட்டி கூடுகிறது:
பிரதமருக்கு கடும் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், 2ஜி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் கலந்து கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எதிர்கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி முடிவெடுக்கவுள்ளனர்.
நாடாளுமன்றம் மீண்டும் ஸ்தம்பிப்பு:
இதற்கிடையே, இன்றும் நாடாளுமன்றம் ஸ்தம்பித்து ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூடியபோது 2ஜி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மாலையில் அமைச்சரவைக் கூட்டம்:
இந்த பரபரப்பான சூழலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications