விஜயகாந்த்தால் நாடாள முடியும், மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்-எஸ்.வி.சேகர் பேச்சு
சென்னை: முதலில் பாஜக, பின்னர் அதிமுக, பிறகு திமுக ஆதரவு நிலை என்று மாறி மாறி பேசி வரும் நடிகரும், இன்னும் எம்.எல்.ஏ பதவியை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பவருமான எஸ்.வி.சேகர் தற்போது விஜயகாந்த்தால் நாடாள முடியும், அவரது படத்தை தடுக்கப் போவதாக சொல்பவர்களை முறியடிப்பார், மிரட்டலுக்கெல்லாம் அவர் பயப்பட மாட்டார் என்று பேசியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான எஸ்.வி.சேகர், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பின்னர் திமுகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால் அங்கு நடந்தது என்னவோ தெரியவில்லை, சமீபத்தில் ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் ராகுல் காந்தியை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். காங்கிரஸில் சேருவது குறித்து யோசித்து முடிவெடுப்பேன் என்றார்.
இந்த நிலையில் தற்போது விஜயகாந்த்துக்கு புகழாரம் சூட்டிப் பேசியுள்ளார். நாடாளும் தகுதி உடையவர் விஜயகாந்த் என்றும் கூறியுள்ளார்.
விஜயகாந்த் தானே நடித்து, இயக்கி வெளியிடப்போகும் விருதகிரி பட ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இப்படிப் பேசினார் சேகர்.
இதுகுறித்து சேகர் கூறுகையில், தமிழக அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய மக்கள் சக்தியை விஜயகாந்த் பெற்றிருக்கிறார். இந்தப் படம் எப்படி வெளியே வரும் பார்த்து விடலாம் என சவால் விட்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் அல்ல விஜயகாந்த்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. போஸ்டர் கூட ஒட்ட முடியவில்லை. இவற்றையெல்லாம் மீறி எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டார்.
அந்தப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த் படமும் வெற்றி வாகை சூடும். நாடாள முடியுமா என்று எம்.ஜி.ஆரைக் கேட்டார்கள். நாடாள முடியும் என நிரூபித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர். அதுபோல விஜயகாந்தும் நாடாளுவார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications