பீகார் தேர்தல்-போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோற்றார் ராப்ரி தேவி
பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தான் போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளார்.
ரகோபூர் மற்றும் சோனீப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் ராப்ரி. இதில் சோனீப்பூர் தொகுதியில் ஆரம்பத்திலிருந்தே பின்தங்கியிருந்தார். ரகோபூரில் முன்னணியில் இருந்தார். பின்னர் அதிலும் அவர் பின்தங்க விட்டார்.
இறுதியில் ரகோபூரில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் சதீஷ்குமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராப்ரியை வீழ்த்தினார்.
அதேபோல சோனீப்பூரிலும் ராப்ரி தோல்வியைத் தழுவினார்.
வீழ்ந்த தலைவர்கள், சாதனை வெற்றிகள்:
லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் கணவருடைய தம்பி ராஜ்சேகர் சஸ்ராம் தொகுதியில் தோற்றார்.
லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் தம்பி பசுபதி பரஸ் அலலி தொகுதியில் தோற்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் காந்தி சிங் நோகா தொகுதியில் வீழ்ந்தார்.
முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள 7 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.
முஸ்லீம்கள் அதிகம் உள்ள முசாபர்பூர் தொகுதியில் முதல் முறையாக பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது. வெற்றி பெற்றவர் சுரேஷ் சர்மா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications