ராஜாவை பிரதமர் தட்டிக் கொடுத்ததை அரசியலாக்கும் எதியூரப்பாவை தட்டிக் கேட்க முடியாத பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், நடந்த முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார். எதியூரப்பாவை தட்டிக் கேட்க முடியாத பாஜக இதை அரசியலாக்கியுள்ளது.

முரசொலி மாறனின் 7-வது நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் பங்கேற்று முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு கைகொடுத்து வரவேற்றார் ஆ.ராஜா. அவரது வரவேற்பை பிரதமரும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவின் தோளில் ஆறுதல் கூறுவது போல தட்டிக் கொடுத்தார்.

இதை பாஜக அரசியலாக்கி விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பிரதமரின் இந்த செய்கை, தவறான சிக்னலை காட்டுவதாக உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜாவுக்கு ஆறுதல் கூறுவது போல பிரதமர் தட்டிக் கொடுத்தது தவறாகும்.

ராஜாவுக்கு பிரதமர் ஆறுதல் கூறி தட்டிக் கொடுத்த செயல், மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் தவறான செய்தியையே கொண்டு செல்லும், இது ரசிப்புக்குரியதல்ல என்றார்.

கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான நில ஊழல் குறித்து ஆதாரங்களுடன் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து பயந்து போன எதியூரப்பா தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அனைத்து நிலங்களையும் திருப்பிக் கொடுத்து விடச் சொன்னார். இதன் மூலம் தனது குடும்பத்தினருக்காக விதிகளை காற்றில் பறக்க விட்ட தனது செயலை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

இப்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும், எதியூரப்பாவை விலக்கத் திராணியில்லாமல் சுருண்டு கொண்டது பாஜக. அதேசமயம், சிஏஜி அறிக்கையில் ராஜாவின் பெயர் வந்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவரது ரத்தம் பார்த்த பிறகும் கூட அது இன்னும் அடங்காமல் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. இப்படிப்பட்ட பாஜக, பிரதமர், ராஜாவை தட்டிக் கொடுத்ததைக் கூட அரசியலாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் இந்த செயலை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், தனிப்பட்ட உறவுகளை உடனடியாக ஸ்விட்ச் ஆப் செய்து விட முடியாது. ராஜா அமைச்சரவையில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தவர். காங்கிரஸ் கூட்டணியின் மூத்த எம்.பிக்களில் ஒருவர்.

மேலும், அவர் குற்றவாளி என்று யாரும் கூறி விட முடியவில்லை. விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக தனிப்பட்ட உறவுகளை, நட்பை தூக்கி எறிந்து விட முடியாது.

நட்பு வேறு, சர்ச்சை வேறு என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அகமது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+