மாஜி எம்எல்ஏ ரவிசங்கர் மீதான பணமோசடி வழக்கில் 30ம் தேதி தீர்ப்பு
நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர் மீதான கூட்டுறவு வங்கி பணமோசடி வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
விளாத்திகுளம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். கடந்த 1996-ம் ஆண்டு விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்தார். 1997-98ம் ஆண்டில் அந்த வங்கியில் ரூ. 18 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக ரவிசங்கர் மற்றும் வங்கி ஊழியர்கள் மீது தூத்துக்குடி வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரவிசங்கர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2004-ம் ஆண்டு வழக்கு தொடர்பாக ரவிசங்கரை நெல்லை ஜேஎம்2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசாரை ஏமாற்றி வி்ட்டு தப்பியோடினார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் வருமானவரி அதிகாரி போல் நடித்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றபோது ரவிசங்கர் மீண்டும் போலீசாரிடம் சிக்கினார். சில நாட்களுக்கு முன் அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று நெல்லை அழைத்து வரப்பட்ட ரவிசங்கர் கூட்டுறவு வங்கி பணமோசடி வழக்கு தொடர்பாக நெல்லை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் தீர்ப்பு வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications