ராஜாவுக்கு எதிராக பேரணி செல்ல முயற்சி-ராமராஜன் உள்பட 85 பேர் கைது
காஞ்சிபுரம்: வாலாஜாபாத்தில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகர் ராமராஜன் உள்பட அ.தி.மு.க.வினர் 85 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் மற்றும் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் சைக்கிள் பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் நேற்று காலை வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் குவிந்தனர். அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி பேரணி செல்ல முயற்சிப்பதை அடுத்து காஞ்சீபுரம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசாரும், சிறப்பு அதிரடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தி.மு.க.வினரும் பஸ் நிலையம் அருகில் ஏராளமாய் குவிந்துவிட்டனர். அ.தி.மு.க.வினரை கைது செய்ய கோரி போலீசாரை வலியுறுத்தினார்கள். சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
உடனே தி.மு.க.வினரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். ஆனாலும் அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் வாலாஜாபாத் பி.கணேசன் தலைமையில், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ராமராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பேரணி செல்ல முயன்றனர்.
இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து பேரணி செல்ல முயன்ற ஒன்றிய செயலாளர் வாலாஜாபாத் ப.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், நடிகர் ராமராஜன் உள்பட 85-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதான அனைவரும் வல்லக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 5 மணி அளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்











Click it and Unblock the Notifications