காதலியுடன் உடன்கட்டை ஏறிய காதலன்: பஞ்சாபில் துயரம்
சன்டிகர்: பஞ்சாபில் பள்ளி மாணவர் ஒருவர் காதலியுடன் உடன்கட்டை ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் கல்யாணம் மறுநாள் விவாகரத்து என்று போய்க் கொண்டிருக்கும் உலகில் பள்ளி மாணவர் ஒருவர் காதலியுடன் உடன்கட்டை ஏறியுள்ளார். இந்த உலகில் தான் ஒன்று சேரமுடியவில்லை மறு உலகிலாவது ஒன்று சேரலாம் என்று நினைத்து செய்துவிட்டார் போலும்.
பஞ்சாப் மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள மல்சிங்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்டுசிங் (17). பிளஸ் - 1 படித்து வந்தார். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த வீர்பால் கவுர் (17) என்ற பிளஸ்-1 மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்கள் காதல் விவகாரம் வீர்பால்கவுர் வீட்டிற்குத் தெரிய வரவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்கள் மகளையும் கண்டித்துள்ளனர். இனி பிட்டுவுடன் சேரவே முடியாது என்ற முடிவுக்கு வந்த கவுர் தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
பின்னர் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் சிதைக்கு தீ மூட்டி சடங்குகள் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். இதற்கிடையே வீர்பால்கவுரின் மரணம் பற்றி அறிந்த பிட்டு சுடுகாட்டிற்குச் சென்று எரிந்து கொண்டிருந்த சிதையில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இன்றைய உலகில் இப்படியும் ஒரு காதலன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications