2ஜி விவகாரம்: ராடியா டேப்புகள் சுப்ரீம் கோட்டில் ஒப்படைப்பு

நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் நீதிபதி ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்சிடம் இதை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஒப்படைத்தார்.
இந்த உரையாடல்கள் இணையதளத்திலிருந்து டெளன்-லோட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்கைத் தொடர்ந்த பொது நல அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையிஸ், மொத்தம் 5,800 உரையாடல்களை பதிவு செய்ததாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால், அதில் 3,000 உரையாடல்கள் மட்டுமே டேப்புகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள உரையாடல்களின் டேப்புகள் எங்கே என்றார்.
டாடா வழக்கு-மத்திய அரசுக்கு நோட்டீஸ்:
இந் நிலையில் நிரா ராடியா டேப் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடா தொடர்ந்த வழக்கில் சிபிஐ, உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் 10 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு இந்த டேப்களை வெளியிட்ட அவுட்லுக், ஓபன் மெகசின் இதழ்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும் நிரா ராடியாவுக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் லீக் ஆகின.
2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ரத்தன் டாடாவுக்கும் நிரா ராடியாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலும் இப்போது வெளியானது.
இதை எதிர்த்து டாடா வழக்கு தொடர்ந்தார். இந்த உரையாடல் வெளியாகி இருப்பதன் மூலம், தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாடா கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு, சிபிஐ, உள்துறை அமைச்சகம், அவுட்லுக், ஓபன்மெகசின் இதழ்கள் ஆகியோருக்க விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த வழக்கு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications