அதிமுக கூட்டணிக்கு வருவதுதான் விஜயகாந்துக்கு நல்லது, இல்லாவிட்டால் அவருக்கு கெட்டது: தா.பா

நிருபர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்ந்து வருவதற்கு கருப்புப் பணப் புழக்கம் தான் காரணம்.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு லட்சம், கோடிகளில் பல துறைகளில் ஊழல் நடந்து வருகிறது. இதற்கு முழுக்க, முழுக்க காங்கிரஸ் அரசின் திறமையின்மையே காரணம்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு நியமித்த தலைமை தணிக்கை அதிகாரியே ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட மறுக்கிறது.
கடந்த 16 நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடக்கவில்லை. கூட்டு குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடாதவரை இதே நிலை தொடரும்.
2ஜி ஒதுக்கீட்டில் செய்த தவறு மன்னிக்கத்தக்கதல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை ஊழல் செய்தவர்களிடம் இருந்து பெற்று சரிகட்ட வேண்டும். அத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கைது செய்து நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் 3,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை ரத்து செய்துவிட்டு மறு ஏலம் விட்டால், அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை கிடைக்கும்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் குறிப்பிடத்தக்க அளவில் அணைகளோ, தொழிற்சாலைகளோ கட்டப்படவில்லை. எனவே மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் எல்லாம் வீணாகிறது.
தமிழகத்தில் பொறுப்பற்ற ஒரு ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு இளவரசர் ஆட்சி செய்து வருகிறார். எந்தத் திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக நிச்சயமாகத் தோற்கும். அரசு ஊழியர்களும் மகளிர் சுய உதவி குழுக்களில் சிலருமே திமுகவுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனாலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வந்தே தீரும்.
வரும் தேர்தலில் நாங்கள் இருக்கும் கூட்டணிக்கு (அதிமுக) விஜயகாந்த் வர வேண்டும். அவரை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் கூட்டணிக்கு அவர் வருவது அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. வராவிட்டால் அவருக்கும் கெட்டது நாட்டுக்கும் கெட்டது என்றார் பாண்டியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications