ராஜஸ்தானில் தூங்கிக் கொண்டிருந்த 4 சகோதர, சகோதரிகள் தீயில் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு சகோதர, சகோதரிகள் திடீர் என்று ஏற்பட்ட தீவிபத்தில் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நிம்பா ராம் (16), கர்ணா ராம் (12), ஜெடி (8), சக்கு (4) என்னும் நான்கு சகோதர, சகோதரிகள் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர் அவர்களை விட்டுவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் வீடு திடீர் என்று தீப்பிடித்தது. இதில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேரும் கருகியும், மூச்சுத் திணறியும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications