குமரி மாவட்ட அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா பங்கேற்பு

குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் இன்று 13வது கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து இன்று சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்குச் சென்றார் ஜெயலலிதா. அங்கு விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் அங்கிருந்து அருமனைக்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்டார். சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு அருகில் உள்ளது அருமனை. அங்கு, கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், அதிமுகவினர் திரண்டு வந்திருந்தனர். இந்த விழாவை அதிமுகவின் பலம் பார்க்கும் நிகழ்ச்சியாக அதிமுக மாற்றியுள்ளது. விழாவுக்கு ஏராளமான அதிமுகவினர் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர், பாதிரியார்கள், கிறிஸ்தவ பிரமுகர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications