குஜ்ஜார்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர், சோனியாவுக்கு கோரிக்கை
ஜம்மு: ராஜஸ்தானில் குஜ்ஜார் சமுதாயத்தினர் நடத்தி வரும் போராட்டத்தில் தலையிட்டு சுமூகத் தீர்வு கண்டு முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் சமுதாய அமைப்பான பழங்குடியினர் ஆய்வு மற்றும் கலாச்சார பவுண்டேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் செயலாளர் ஜாவித் ராஹி கூறுகையில், ராஜஸ்தானில் பழங்குடியினர் அந்தஸ்து தரக் கோரி குஜ்ஜார் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்லனர். அவர்களது போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த விவகாரத்தில் பிரதமர், சோனியா காந்தி ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இதேபோன்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்து நீண்ட காலமாக அமைதி வழியில் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தியாவின் 12 மாநிலங்களில் குஜ்ஜார் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பிற பழங்குடியினருக்கு அளிக்கப்படும் உரிமைகள், சலுகைளை வழங்கி சம மரியாதையுடன் நடத்த வேண்டும். குஜ்ஜார்கள் தங்களது உரிமைகளைப் பெற மனித உரிமை அமைப்புகள் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications