மீண்டும் தாக்குதலுக்குள்ளான தமிழக மீனவர்கள்-இலங்கை அட்டகாசம் தொடருகிறது
ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படைக் காடையர்கள் தாக்கி மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி, மீனவர்களையும் தாக்கி விரட்டியுள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு சுத்தமாக இந்திய கடலோரக் காவல் படையிடமிருந்தோ அல்லது கடற்படையிடமிருந்தோ இதுவரை எந்தப் பாதுகாப்பும் கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்போதெல்லாம் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களைத் தாக்கும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 600 படகுகளில் சென்ற தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வர மீனவர்களை தாக்கியுள்ளனர். மேலும் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்திய கடலோர எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர், விலை மதிப்புமிக்க மீன்களையும் பறித்து சென்றனர்.
கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், படகுகளில் ஏறி மீன்களை அள்ளிச் சென்றனர். மேலும் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என விரட்டி அடித்தனர்.
இதேபோல் கடந்த வாரம் காரைக்கால் பகுதி மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், வழிகாட்டும் கருவிகளையும், மீன்களையும் பறித்து சென்றனர்.
இப்படி அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் நிலை குலைந்து போயுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications