ஸ்பெக்ட்ரம் விசாரணை-முரளி மனோகர் ஜோஷி மீது பாஜக கடும் கோபம்
டெல்லி: கிட்டத்தட்ட சோம்நாத் சாட்டர்ஜி நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார் முரளி மனோகர் ஜோஷி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பாதகமாக நடக்க சோம்நாத் சாட்டர்ஜி மறுத்தபோது அவர் மீது சிபிஎம் கோபம் கொண்டதோ, அதேபோல இப்போது ஜேபிசி விசாரணையை விட பிஏசி விசாரணையே சிறந்தது என்று கருத்து தெரிவித்த அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது பாஜக கடும் கோபத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது.
சோம்நாத் சாட்டர்ஜி லோக்சபா சபாநாயகராக இருந்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது லோக்சபாவில். அப்போது சோம்நாத் சாட்டர்ஜியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும், அதற்கு வசதியாக தனது சபாநாயகர் பதவியை உதற வேண்டும் என்று அவர் சார்ந்த சிபிஎம் உத்தரவிட்டது.
ஆனால் அதை நிராகரித்து விட்டார் சோம்நாத். மாறாக, நான் எக்கட்சியையும் சாராதவன். நடுநிலையானவன். எனவே சபாநாயகர் பொறுப்பை நான் நிறைவேற்றுவேன் என்று கூறி விட்டார். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அவமானப்படுத்தியது சிபிஎம்.
தற்போது முரளி மனோகர் ஜோஷியும் கிட்டத்தட்ட சோம்நாத் சாட்டர்ஜியின் நிலைக்கு வந்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருக்கிறார் ஜோஷி. இந்தக் குழு தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை ஆரம்பத்திலிருந்தே நிராகரித்து வந்தது பாஜக. மேலும், இதற்குப் பதில் ஜேபிசி எனப்படும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுதான் விசாரிக்க வேண்டும் என கூறி வருகிறது.
ஆனால் ஜோஷி தலைமையிலான பிஏசி தனது விசாரணையை தொடங்கி விட்டது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தயார் என பிரதமர் மன்மோகன் சிங்கும் அறிவித்து கடிதமும் எழுதியுள்ளார். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜோஷியும் அறிவித்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையால் பாஜக தலைமை கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. மேலும், பொதுக் கணக்குக் குழுவுக்கு, ஜேபிசியை விட கூடுதல் அதிகாரம் கொண்டுள்ளதாகவும் ஜோஷி கூறியது பாஜகவை மேலும் எரிச்சல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜோஷி கூறுகையில், பொதுக் கணக்கு குழுவின் அதிகாரம், சில வரம்புகளுக்கு உட்பட்டது என, கூறுவது சரியல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை பொதுக் கணக்கு குழுவால் நடத்த முடியும். குறிப்பாக,இந்த விவகாரத்தில் கடந்த 2001ல் இருந்து மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து விசாரிக்க முடியும்.
பொதுக் கணக்கு குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதற்கு பாஜக மூத்த தலைவரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக் கணக்கு குழுவின் அதிகாரம் வரைமுறைகளுக்கு உட்பட்டது. கணக்கு குறித்த விவரங்களை மட்டுமே பொதுக் கணக்கு குழு விசாரிக்க முடியும்.
கூட்டுக் குழு தான், அரசு பொறுப்பாக செயல்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க முடியும். எனவே, கூட்டுக் குழு விசாரித்தால் தான், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். பொதுக் கணக்கு குழு முன் ஆஜராக தயார் என, பிரதமர் கூறியுள்ளதில் எந்த அர்த்தமும் இல்லை. பொதுக் கணக்கு குழுவால், அமைச்சர்களையே நேரில் அழைத்து விசாரிக்க முடியாது என்கிறபோது, பிரதமரை எப்படி நேரில் அழைத்து விசாரிக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து பாஜக தலைவர்களுக்குள்ளேயே மோதல் வெடித்துள்ளது.
பாஜகவின் நிலைக்கு முற்றிலும் நேர் மாறாக முரளி மனோகர் ஜோஷி செயல்படுவதாக பாஜக தலைவர்கள் முனுமுனுக்கிறார்கள். ஆனால், பொதுக் கணக்குக் குழுத் தலைவர் என்ற முறையில் ஜோஷி செயல்படுவதாக அவரது தரப்பு கூறுகிறது.
ஜோஷி ஒரு தீவிர வாஜ்பாய் ஆதரவாளர். அவர் எப்போதுமே அத்வானியைக் கண்டு கொண்டதில்லை. அவரது பேச்சைக் கேட்கவும் மாட்டார். எனவே தற்போது அவர் மேற்கொண்டுள்ள நிலையில் பாஜக பெரும் தர்மசங்கடத்தை சந்தித்துள்ளது.
சோம்நாத் சாட்டர்ஜிக்கு ஏற்பட்ட நிலைமை முரளி மனோகர் ஜோஷிக்கு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications