ரூ. 24 கோடி வாட் வரி கட்ட விப்ரோவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: சாப்ட்வேர்களை மறு ஏற்றுமதி செய்தது தொடர்பாக ரூ. 24 கோடி வாட் வரியை இன்று மாலைக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாப்ட்வேர்களை மறு ஏற்றுமதி செய்ததற்கு வாட் வரி கட்டாமல் விட்டு விட்டது விப்ரோ. இதையடுத்து அதற்குரிய வாட் வரியைக் கட்ட வேண்டும் என வணிக வரி ஆணையம் விப்ரோவுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது விப்ரோ. இந்த வழக்கை டிசம்பர் 10ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம்,
வரித் தொகையில் 50 சதவீதத்தை கட்டி விட்டு, வணிக வரி ஆணையத்தில் அப்பீல் செசய்யுமாறும் அறிவுறுத்தியது. 2 வாரத்திற்குள் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் விப்ரோ இதைச் செய்யவில்லை. இதையடுத்து விப்ரோவின் வங்கிக் கணக்குகளை வணிக வரிகள் ஆணையம் முடக்கி வைத்தது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாடியது விப்ரோ.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இன்று (29.12.2010) மாலைக்குள் ரூ. 24 கோடி வாட் வரியைக் கட்ட வேண்டும் என்றும், அதை வணிக வரிகள் ஆணையம் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான விப்ரோவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications