சபரிமலை பக்தர்கள் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுரை
சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்போது பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் மிகுதியாக காணப்படுகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த தகவல் இயக்கம் சபரிமலை பக்தர்களிடையே நடத்திடவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் (காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண்) தென்பட்டால், சபரிமலை பயணத்தை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தல் வேண்டும்.
பயணத்தின்போது பக்தர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேரள மாநிலத்தில், பக்தர்கள் பயணம் செய்யும்போது, காய்ச்சலுக்குரிய அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால், அருகில் உள்ள கேரள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளை அணுகி நோய்க்கான மாத்திரைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், சபரிமலை பயணத்தின்போது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தொகையுடன் செல்ல வேண்டியதிருப்பதால், சபரிமலை பயணம் தொடங்குவதற்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு முன் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சபரிமலை செல்லும் பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications