திமுக - கோவை மாநகராட்சியைக் கண்டித்து இன்று கோவையில் அதிமுக ஆர்பாட்டம்
கோவை: கோவை மாநகராட்சியைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் இன்று கோவையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த பணிகள் நிறைவு பெறவில்லை. பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டப் பணிகளும் முடியவில்லை.
திடக்கழிவு மேலாண்மை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை நஞ்சுண்டாபுரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் கட்டியதால் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
மேலும், திட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடையவில்லை என்றும் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் மின்சார ஒயர்களை பூமிக்கு அடியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை.
மாநகராட்சி நிர்வாகமும், தி.மு.க. அரசும், சொத்து வரி, வணிக வரி, குப்பை வரி, குடிநீர் வரி ஆகியவற்றை உயர்த்தப் போவதாக தெரிய வருகின்றது.
எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. அரசைக் கண்டித்து இன்று கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications