திருச்சியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு கபில் சிபல் அடிக்கல் நாட்டினார்
திருச்சி: இந்தியாவின் 11 வது ஐ.ஐ.எம்-க்கு திருச்சியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, லக்னோ, கோழிக்கோடு, இந்தூர், ஷில்லாங், ராஞ்சி, ரோடக், ராய்ப்பூர் ஆகிய 10 இடங்களில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) அமைந்துள்ளது.
திருச்சி மற்றும் காசிபூரில் மேலும் இரண்டு இந்திய மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய மனிதவளத்துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 174 ஏக்கர் நிலம், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 26 ஏக்கர் நிலம் என மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது.
அதன்படி திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி, மாநில அமைச்சர்கள் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications