தமிழகத்தில் 10-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு
நெல்லை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பெயர் சேர்க்க கடந்த நவம்பர் 7-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை விடு்முறைக்காக பலர் சொந்த ஊருக்கு சென்றதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 13-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
கடைசி நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பலர் ஆர்வத்துடன் மனு அளித்தனர். வாக்களர்களிடம் இருந்து பெறப்பட்ட சேர்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்து அனைத்து வீடு, வீடாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வாக்கு பதிவு அலுவலர்கள் இறுதி ஆணை பிறப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து வாக்காளர்களின் முழு விபரங்களையும் கம்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 10-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என சரி பார்த்து கொள்ளலாம். இது தவிர அங்கீகரிக்கப்பட்ட அரசி்யல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications