கேன்டீன் ஸ்டோர் ஊழல்-பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு ஆஜராகி ராணுவத் தளபதி விளக்கம்
டெல்லி: ராணுவ கேன்டீன் ஸ்டோரில் பொருட்கள் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே.சிங்.
ராணுவத் தலைமைத் தளபதி ஒருவர் பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு ஆஜராவது இதுவே முதல் முறையாகும்.
இந்த விசாரணைக்கு வருமாறு முப்படைகளின் தலைமைத் தளபதிகளுக்கும் பொதுக் கணக்குக் கமிட்டி உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்புத்துறையின், கேன்டீன் ஸ்டோர் துறையின் நிர்வாகத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் கமிட்டி விசாரித்து வருகிறது. இன்று காலை கமிட்டி முன்பு ஆஜரானார் சிங். மேலும் ராணுவ உயர் அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர்.
விமானப்படைத் தளபதி பி.வி.நாயக்கும் இன்று ஆஜராகவுள்ளதாக கூறப்படுகிறது. கடற்படை சார்பில் அதன் துணைத் தலைவர் டி.கே.தீவான் ஆஜராவார். கடற்படைத் தலைமைத் தளபதி நிர்மல் வர்மா இந்தோனேசியா சென்றிருப்பதால் அவர் வரவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications