கோலாகலமாக இன்று தொடங்குகிறது சென்னை சங்கமம்

தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழகத்தின் இதர பகுதிகளுடன், கலாச்சார, கலை ரீதியாக ரொம்பவே தனிமைப்பட்டு இருக்கிறது சென்னை. தமிழகத்தின் கிராமங்களில் உயிரோடு உயிராக இணைந்திருக்கும் பல்வேறு கலைப் பொக்கிஷங்களை சென்னை மக்களில் பலர் அறியாத நிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
ஏராளமான நாட்டுப்புறக் கலைகள், கிராமத்து உணவு வகைகள் உள்ளிட்டவை சென்னை நகர மக்களுக்கு அன்னியமாகவே இருந்து வந்தது.இதற்கு முடிவு கட்டிய பெருமை தமிழ் மையத்திற்கு உரியது. பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மையத்துடன் இணைந்து திமுக எம்.பி. கனிமொழியும், தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை சங்கமம் என்ற பெயரில் சென்னைக்கு தமிழகத்தின் கலை பொக்கிஷங்களை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிதான் சங்கமம்.
சென்னை மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த கலை விழா. பொங்கல் பண்டிகையையொட்டி இது நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான சங்கமம் கலை விழா இன்று தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு தீவுத் திடலில் நடைபெறும் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் முன்னிலை வகிக்கிறார். கனிமொழி அறிமுக உரை நிகழ்த்துகிறார். தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பார் தொகுப்புரை நிகழ்த்துகிறார்.
தொடக்க நிகழ்ச்சியாக வானம் வசப்படும் என்ற இசை நாடகம் நடைபெறும் என்று தமிழ் மையம் தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications