மதுரை இலந்தைக்குளத்தில் ஹனிவெல் சாப்ட்வேர் நி்றுவனத்துக்கு 4.5 ஏக்கர் நிலம்

மதுரை இலந்தைக்குளத்தில் 28.91 ஏக்கரிலும், வடபழஞ்சியில் 245.17 ஏக்கரிலும் எல்காட் சார்பில் இரு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இந்த பூங்காக்களை தொழிலதிபர்களுக்கு சுற்றிக் காட்டி அதன் வசதிகளை விளக்க எல்காட் சார்பில் ரோட் ஷோ நடத்தப்பட்டது. அப்போது பேசிய சந்தோஷ்பாபு,
தற்போது நிறைய நிறுவனங்கள் இந்த பூங்காக்களில் இடம் கேட்கின்றன. இலந்தைகுளத்தில் எல்காட் கட்டடத்தில் சதுர அடிக்கான வாடகை 23 ரூபாய். மற்ற பகுதிகள் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும். இலந்தைக் குளத்தில் ஒரு ஏக்கர் நிலம் 30 லட்சம் ரூபாய்க்கும், வடபழஞ்சியில் 15 லட்சம் ரூபாய்க்கும் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். வடபழஞ்சியில் பூங்காவுக்கு அருகே ரயில்வே மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் இடம் கேட்டவுடன் வழங்கப்படும். வடபழஞ்சியில் இதுவரை ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. முழுத்தொகையும் செலுத்திய சத்யம் நிறுவனம், தற்போது அதைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது.
இப்பூங்காக்களின் மூலம் 100 சதுர அடிக்கு ஒருவருக்கு நேரடியாகவும், இருவருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இலந்தைக்குளம் தொழில்நுட்பப் பூங்காவில் அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்துவிட்டன. அதை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே இலந்தைக்குளத்தில் ஹனிவெல் சாப்ட்வேர் நி்றுவனத்துக்கு 4.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications