மோடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பும் சென்னை போலீஸ்-பதிலளிக்காவிட்டால் வழக்கு

ஐபிஎல் போட்டி முறைகேடுகள் தொடர்பாக மோடி உள்ளிட்ட 7 பேர் மீது கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒருவர் மட்டுமே விசாரணைக்காக வந்து போனார். மோடி உள்ளிட்ட 6 பேர் மட்டும் இதுவரை வரவும் இல்லை, பதிலளிக்கவும் இல்லை, சம்மனை வாங்கவும் இல்லை.
இதையடுத்து இந்த 6 பேரும் வருகிற 25, 26, 27 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி மத்திய குற்றப் பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஒருவேளை இதற்கும் அவர்கள் பதிலளிக்காவிட்டால், வராவிட்டால் 6 பேர் மீ்தும் புதிதாக ஒரு வழக்கு தொடரப்படும் என காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
ஐபிஎல் முறைகேடுகள் தொடர்பாக லலித் மோடி எந்தவித விசாரணைக்கும் வராமல், டபாய்த்துக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் வாரிய விசாரணைக்கும் இதுவரை அவர் நேரில் ஆஜராகவில்லை. கேட்டால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, மிரட்டல் இருக்கிறது என்று கதை கதையாக அளந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications