தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்-பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: இந்து மாணவர்களுக்கு உதவி தொகை வழங்காமல், மற்ற மதத்தினருக்கு உதவி வழங்கி வருவதைக் கண்டு பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர். நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள், இதனால் தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக பாஜக சார்பில் கடந்த நவம்பர் 19ம் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த யாத்திரை நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் இந்த யாத்திரை 29ம் தேதி சென்னையில் முடிவடைகிறது.
அதில் பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த யாத்திரை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையி்ல், சிறுபான்மையின மாணவ, மாணவிகளைப் போலவே ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கோவில்களில் அரசு தலையிடக் கூடாது என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை யாத்திரையில் வலியுறுத்தி வருகிறோம். 38 மாவட்டங்களிலும் பொதுமக்களை சந்திக்கிறோம்.
பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவர்களுக்கு உதவி தொகை வழங்காமல், மற்ற மதத்தினருக்கு உதவி வழங்கி வருவதைக் கண்டு மாணவர்களும், பொது மக்களும் வேதனை அடைந்துள்ளனர். ஓட்டுக்காக மக்களை பிளவுபடுத்தும் இந்த போக்கு ஒழிக்கப்பட வேண்டும்.
நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள், இதனால் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். சென்னையில் 29ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இது திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இந்த யாத்திரையின் மூலம் கணிசமான வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும், தேர்தல் முடிந்து அமையப் போகும் புதிய சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்களும் இருப்பார்கள் என்றார்.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications