சர்வதேச இந்தி திரைப்பட விழாவை நடத்தும் விஸ்கிராப்ட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு
மும்பை: சர்வதேச இந்தி திரைப்பட விழாவை நடத்தும் விஸ்கிராப்ட் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா என்ற பெயரில் இந்திப் படங்களுக்கு விருது அளிக்கும் நிகழ்ச்சியை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது இந்த விஸ்கிராப்ட் நிறுவனம். கடந்த ஆண்டு இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் பட விழாவை நடத்திய அதே நிறுவனம்தான் இது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை தூக்கி எறிந்ததும் இந்த நிறுவனம்தான்.
இதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவையும் நடத்தியது.
இந்தநிலையில் இன்று இந்த நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர்அதிரடி ரெய்டு நடத்தினர். காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அங்கமாக இந்த ரெய்டு நடந்துள்ளது. வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
நிறுவனத்திற்குள் புகுந்த அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனை குறித்து விஸ்கிராப்ட் நிறுவனர் சபாஸ் ஜோசப் கூறுகையில், சோதனை நடந்தது உண்மைதான். இருப்பினும் அதற்கு மேல் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று மொட்டையாக கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications