இந்தியா-இந்தோனேசியா இடையே 15.1 பில்லியன் டாலர் ஒப்பந்தம்
டெல்லி: இந்தியா, இந்தோனேசியா இடையே 15.1 பில்லியன் டாலர் மதிப்பிலான 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியாவின் 62வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூத்யோனா கலந்து கொண்டார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளித்து கெளரவப்படுத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு குறித்து குடியரசுத் தலைவர் சுட்டிக் காட்டினார். மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோ இடையிலான நட்பையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், ஐநா., உலக வர்த்தக அமைப்பு, ஜி20 ஆகிய அமைப்புகளில் சர்வதேச பிரச்சினைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதீபா பாட்டீல் வலியுறுத்தினார்.
தீவிரவாதம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் இந்தோனேசிய அதிபரிடம் எடுத்துரைத்த பிரதீபா பாட்டீல், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதை வலியுறுத்தினார்.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே 15.1 பில்லியன் டாலர் மதிப்பிலான 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications