கெய்ரோ வந்தார் எல்பராதே-அதிபர் முபாரக்குக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு
கெய்ரோ: ஐ.நாவின் சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், எகிப்தில் நடந்து வரும் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளவருமான முகம்மது எல்பராதே சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார். அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டத்தில் அவரும் பங்கேற்கவுள்ளார்.
அவர் நேற்று கெய்ரோவில் வந்து இறங்கியதும் அவரைச் சுற்றி பெருந்திரளான மக்கள் கூடிவிட்டனர். அதிபர் முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காகத் தான் எகிப்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில் எல்பராதே எகிப்து வந்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.
இது குறித்து நோபல் பரிசு பெற்றவரான எல்பராதே (68) கூறுகையில்,
நான் எகிப்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வேன். இன்று மதிய தொழுகைக்குப் பின் நடக்கும் பேரணியிலும் கலந்து கொள்வேன். இது எகிப்திற்கு இக்கட்டான நேரம். நான் எகிப்து மக்கள் பக்கம் இருக்கவே வந்துள்ளேன்.
நாட்டில் கலவரம் வெடிப்பதை எந்த எகிப்தியரும் விரும்பமாட்டார்கள். இனி திரும்பி செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு வன்முறையை கைவிடும் என்று நான் நம்புகிறேன். நான் இந்த மாற்றங்களை ஒழுங்கான மற்றும் அமைதியான வழியில் ஏற்படுத்த விரும்புகிறேன். அரசும் அவ்வாறே செய்யும் என்று நம்புகிறேன்.
முபாரக் 30 ஆண்டுகாலம் நாட்டுக்கு சேவை செய்துவிட்டார். இது அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications