கர்நாடகத்தில் சர்ச்கள் மீது நடந்த தாக்குதலில் பாஜகவுக்கு தொடர்பில்லை-விசாரணைக் கமிஷன்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் சர்ச்சுகளை குறி வைத்து நடத்ப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் பாஜக மற்றும் சங் பரி்வார் அமைப்புகளுக்குத் தொடர்பில்லை என்று இதுதொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூர், கோலார், உடுப்பி, பெல்லாரி ஆகிய நகரங்களில் சர்ச்சுகளை குறி வைத்து ஒரு கும்பல் தாக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அப்போது. இந்த சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச் செயல். அரசுக்குக் கெட்ட பெயரையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் நடந்த முயற்சி இது என்று அப்போது முதல்வர் எதியூரப்பா கூறியிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி பி.கே.சோமசேகரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தற்போது பாஜகவுக்கோ, சங் பரிவார் அமைப்புகளுக்கோ இந்த தாக்குதலில் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.
இதுகுறித்து கமிஷன் அறிக்கையில், அரசியல்வாதிகள், பாஜக, சங் பரி்வார் அமைப்பினர், மாநில அரசு ஆகியோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கிறிஸ்த அமைப்புகள் கொடுத்த புகார்களில் உண்மை இல்லை.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான சில விஷமிகளால் இந்த தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாஜக அரசு கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமோ என்ற எதிர்பார்ப்பில் இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று சந்தேகிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் சோமசேகரா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications