வங்கக்கடலில் புயல் சின்னம்-கடல் கொந்தளிப்பு-5 மீனவர்கள் மாயம்
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் உள்ளது. நாகை அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
வட கிழக்குப் பருவ மழைக் காலம் முடிவடைந்து விட்டது. தற்போது பனிக் காலமும் முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் தென் மேற்குப் பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இது தற்போது வலுவிழந்த நிலையில் இருப்பதாக வானிலை ஆய்வ மையம் கூறியுள்ள போதிலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை. தொடர்ந்து சூறைக் காற்று வீசி வருவதால் படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்குச் சென்று இதுவரை திரும்பவில்லை. அவர்கள் கடல் கொந்தளிப்பில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்யலாம் என்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் காற்று வீசி வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications