இஸ்ரோவின் ஸ்பெக்ட்ரம் ஊழல்: பிரதமர் அலுவலகம் மறுப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் (Antrix Corporation) ஜி-சாட் செயற்கைக் கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை திவாஸ் திவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு மிகக் குறைந்த விலைக்கு ஒதுக்கியதாககவும், இதனால் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் மத்திய தலைமை தணிக்கைத் துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரோ நிறுவனம் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளித்துறையின் கீழ் செயல்படுகிறது.
இந்நிலையில் இந்தப் புகாரை பிரதமர் அலுவலகம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளிட்டுள்ள அறிக்கையில், எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இரண்டு நிறுவனங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு உள்ளதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இது போன்ற இழப்பு ஏதும் நடக்கவில்லை.
எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. எனவே, வருவாய் இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகையத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை.
திவாஸ் நிறுவனத்திடம் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் சோதனைரீதியில் குத்தகைக்குதான் விடப்பட்டுள்ளது. ஆகையால் இவ்வளவு பெரிய வருவாய் இழப்பு ஏற்பட சாத்தியமே இல்லை. இதுதொடர்பாக சிஏஜி அலுவலகமும், விண்வெளித்துறையும் உண்மை நிலையை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1.7 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை தந்ததும் இதே தணிக்கைத்துறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications