Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரோவின் ஸ்பெக்ட்ரம் ஊழல்: விசாரிக்க கமிட்டி அமைப்பு

Subscribe to Oneindia Tamil

Isro Satellittee
டெல்லி: இஸ்ரோவின் செயற்கைக் கோள்களில் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை தனியார் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு ஒதுக்கீடு செய்ததை மறு ஆய்வு செய்ய உயர் மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கேபினட் செயலாளர் பி.கே.சதுர்வேதி, திட்டக் கமிஷன் உறுப்பினரும் பிரபல விஞ்ஞானியுமான ரோதம் நரசிம்மா ஆகியோர் கொண்ட இந்தக் கமிட்டியை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் (Antrix Corporation) ஜி-சாட் செயற்கைக் கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை திவாஸ் திவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு மிகக் குறைந்த விலைக்கு ஒதுக்கியது. இதனால் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் மத்திய தலைமை தணிக்கைத் துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் பிரிவு செயலாளராக இருந்த டாக்டர் எம்.ஜி.சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான திவாஸ் மல்டி மீடியா நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 2 ஜி-சாட் செயற்கைக் கோள்களில் 70 மெகாஹெட்ஸ் எஸ்-பேண்ட் அலைவரிசையை வாங்க ஒப்பந்தம் செய்தது. 20 ஆண்டுகளுக்கு இந்த அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கு மிகக் குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ரூ. 1,000 கோடி மட்டுமே இதற்கு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஜி-சாட் செயற்கைக்கோளை உருவாக்கவே குறைந்தது ரூ. 2,000 கோடி செலவாகும் என்ற நிலையில் அதை ஏவும் செலவையும் சேர்த்தால் நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட இருந்தது.

இந்த செயற்கைக் கோள்கள் இதுவரை ஏவப்படாததால் நாடு தப்பித்தது.

இந் நிலையில் இஸ்ரோ நிறுவனம் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளித்துறையின் கீழ் செயல்பவதால், இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இரண்டு நிறுவனங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு உள்ளதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இது போன்ற இழப்பு ஏதும் நடக்கவில்லை.

எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. எனவே, வருவாய் இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகையத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை.

திவாஸ் நிறுவனத்திடம் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் சோதனைரீதியில் குத்தகைக்குதான் விடப்பட்டுள்ளது. ஆகையால் இவ்வளவு பெரிய வருவாய் இழப்பு ஏற்பட சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தங்களுக்கு ஜி-சாட் செயற்கைக் கோளில் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்க மத்திய அமைச்சரவை 2008ல் ஒப்புதல் அளித்துள்ளதாக திவாஸ் நிறுவனம் பதிலடி தந்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. இந் நிலையில் இது குறித்து விசாரிக்க உயர் மட்டக் கமிட்டியை பிரதமர் அமைத்துள்ளார்.

திவாஸ் நிறுவனத்துக்கும் இஸ்ரோவின் ஆண்ட்ரிஸ் அமைப்புக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்யும். இந்த ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப, வர்த்தக விதிமுறைகள் மற்றும் நிதி தொடர்பான அம்சங்கள் இந்தக் குழுவால் மறு ஆய்வு செய்யப்படு்ம் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கமிட்டி ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+