'என்கிரிப்ட்' விவகாரம் : பிளாக்பெர்ரி சேவையை நிறுத்தக மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இணையதள சேவை, இமெயில், குறுஞ்செய்தி, சமூக வலைதள சேவை போன்ற ஏராளமான வசதிகளை தனது செல்போனில் வழங்குகிறது.
இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை.
இதில் ஒருவர் அனுப்பும் எஸ்எம்எஸை அவர் யாருக்கு அனுப்பினாரோ அவரைத் தவிர மற்றவர்களால் இடைமறித்துப் பார்க்க முடியாது. இந்தத எஸ்எம்எஸ் 'என்க்ரிப்ட்' செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் கனடாவில் தான் உள்ளன. இதனால் பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ், மெயில் போன்றவற்றை இந்திய உளவுப் பிரிவினரால் இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது.
இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெர்ரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றக்கூடும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி பிளாக்பெர்ரி கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் சேவைகளை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதற்காக ஜனவரி 31-ம் தேதி வரை கெடு விதித்திருந்தது.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது,
காலக்கெடு நீட்டிக்கப்படவும் இல்லை. அதே நேரத்தில் சேவையை முற்றிலுமாக ரத்து செய்யவும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசுக்கும், பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தொலை தொடர்பு நிறவனங்களுக்கு உரிமம் அளிக்கும்போதே அதில் செல்போன் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் தேவைப்பட்டால் அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆகையால் தேவைப்படுகையில் வாடிக்கையாளர்களின் கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களை பிளாக்பெரி பகிர்ந்து கொள்ள மறுத்தால் அதன் சேவையை துண்டிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications